/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்
/
ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்
ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்
ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; 2 பேர் சிக்கினர்
ADDED : அக் 01, 2024 05:46 AM

உறையூர் : திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக, மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் இடங்களில் உறையூர் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு மேன்சன் அறையில், பிளாஸ்டிக் பையில், 500 ரூபாய் நோட்டுகளாக, 33 லட்சம் ரூபாய் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த அறையில் தங்கியிருந்த லால்குடியைச் சேர்ந்த பிரபு, 30, கிருஷ்ணன், 27, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதையடுத்து, பணம் மற்றும் இருவரையும், திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இருவரிடமும் பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டது ஹவாலா பணம் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. யாரிடம் கொடுக்க அவர்கள், பணத்தை பதுக்கி வைத்திருந்தனர் என போலீசார் விசாரிக்கின்றனர்.