/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: கலெக்டர் உதவி
/
சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: கலெக்டர் உதவி
ADDED : நவ 25, 2024 04:12 AM
திருச்சி: திருச்சி, பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் மோகன், 45; சுமை துாக்கும் தொழிலாளி.இவரது மனைவி வள்ளி, சுய உதவிக்குழுவில் கடன் வாங்கியிருந்தார். உடல் நலக்குறைவால் வள்ளி உயிரிழந்து விட்டார்.
அவர் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 90,000 ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என, குழு தலைவி தரப்பில் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
தினமும் சுமை துாக்கி, வாழ்க்கை நடத்தும் மோகன், மனைவியில் மருத்துவச் செலவுக்கு கடன் வாங்கியதால், சுய உதவிக் குழு கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மனைவியின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, கோரிக்கை மனு கொடுத்தார்.
அவரது மனுவை பரிசீலித்த கலெக்டர் பிரதீப்குமார், வள்ளி கடனை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்குமாறு, மகளிர் திட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மோகன், கலெக்டருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.