/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தந்தத்தில் தயாரான பொருளை விற்ற எஸ்.ஐ., கைது
/
தந்தத்தில் தயாரான பொருளை விற்ற எஸ்.ஐ., கைது
ADDED : டிச 18, 2024 02:33 AM
திருச்சி:விழுப்புரம் மாவட்ட பகுதியில், யானை தந்தத்தால் தயாரிக்கப்பட்ட பரிசு பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
விழுப்புரம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ., மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
விழுப்புரத்தில் உள்ள உறவினர் ஒருவரிடம், யானை தந்தத்தால் ஆன பரிசு பொருட்களை வாங்கிய மணிவண்ணன், சட்ட விரோதமாக விற்பனை செய்ததை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்படி, திருச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகளால், மணிவண்ணன் நவம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம், விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான எஸ்.ஐ., மணிவண்ணனை, வனத்துறை யினர் கைது செய்தனர்.