/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி: அமைச்சர் நேரு தகவல்
/
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி: அமைச்சர் நேரு தகவல்
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி: அமைச்சர் நேரு தகவல்
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி: அமைச்சர் நேரு தகவல்
ADDED : நவ 18, 2024 04:21 AM
திருச்சி: திருச்சி, மஹாத்மா காந்தி அரசு மருத்துவமனையில், 1.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட லிப்ட் மற்றும் கிருமித்தொற்று கண்டறியும் ஆய்வகம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில், 110 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
மேலும், மருத்துவமனையில், 'போலீஸ் பூத்' கட்டவும் ஆலோசனை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருச்சி அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு கிருமி தொற்று கண்டறிவதற்கான புதிய ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஏழு நாட்களில் முடிவு தெரிந்து கொள்ளும் வகையில், கிருமி தொற்று கண்டறியும் ஆய்வகம் இருந்த நிலையில், புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தின் வாயிலாக, நான்கு மணி நேரத்தில் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை, அடுத்த ஆண்டு ஜூலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார்.
திருச்சியில் சித்த மருத்துவ கல்லுாரி மற்றும் பல் மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
நிதி நிலையை அறிந்து, இந்த ஆண்டிற்குள் கல்லுாரிகளை கொண்டு வர அனுமதி பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.