/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
எஸ்.பி., தம்பதிக்கு ஒரே நேரத்தில் டி.ஐ.ஜி., புரமோஷன்
/
எஸ்.பி., தம்பதிக்கு ஒரே நேரத்தில் டி.ஐ.ஜி., புரமோஷன்
எஸ்.பி., தம்பதிக்கு ஒரே நேரத்தில் டி.ஐ.ஜி., புரமோஷன்
எஸ்.பி., தம்பதிக்கு ஒரே நேரத்தில் டி.ஐ.ஜி., புரமோஷன்
ADDED : டிச 31, 2024 06:28 AM
திருச்சி : திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்தவர் வருண்குமார். 2011ல் ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், தனது பேட்ஜ்ஜில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வந்திதா பாண்டேவை திருமணம் செய்தார்.
பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய இருவரும், இரு ஆண்டுகளுக்கு முன், வருண்குமார் திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாகவும், வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், 2011ல் ஐ.பி.எஸ்., அதிகாரிகளான ஆறு எஸ்.பி.,க்களுக்கு டி.ஐ.ஜி., பதவி உயர்வு வழங்கி, நேற்று முன்தினம் தமிழக அரசு உத்தரவிட்டது. வருண்குமாரும், அவரது மனைவி வந்திதா பாண்டேவும், 2011ல் ஒரே நேரத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆனவர்கள் என்பதால், நேற்று முன்தினம் வெளியான பதவி உயர்வு பட்டியலில், வருண்குமாரும், அவரது மனைவியும் ஒரே நேரத்தில் இடம் பெற்று, டி.ஐ.ஜி.,களாக ஆகி உள்ளனர்.
இதில், வருண்குமார் திருச்சி சரக டி.ஐ.ஜி.,யாகவும், அவரது மனைவி வந்திதா பாண்டே, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கணவன், மனைவி இருவரும், ஒரே நேரத்தில் டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளது, தமிழக போலீஸ் வரலாற்றில் இதுவே முதல்முறை.