/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
/
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
ADDED : மே 08, 2025 01:59 AM
திருச்சி:திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 115 ஏக்கரில், 'ஏசி' வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், சரக்கு வாகன முனையம், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்டவை, 900 கோடி ரூபாயில் கட்டப்படுகின்றன.
இதில், கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், கனரக சரக்கு வாகன முனையம் ஆகியவற்றை, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை திறந்து வைக்கிறார்.
விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு, இன்று காலை 8:00 மணிக்கு வருகிறார். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், இரவு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
மறுநாள் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பின், அன்று இரவு விமானம் மூலம், சென்னை செல்கிறார்.