/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மக்காச்சோள சாகுபடியால் பாதிப்பு மகசூல் குறைவால் போராட்டம்
/
மக்காச்சோள சாகுபடியால் பாதிப்பு மகசூல் குறைவால் போராட்டம்
மக்காச்சோள சாகுபடியால் பாதிப்பு மகசூல் குறைவால் போராட்டம்
மக்காச்சோள சாகுபடியால் பாதிப்பு மகசூல் குறைவால் போராட்டம்
ADDED : பிப் 20, 2024 12:15 AM
திருச்சி:திருச்சி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, த.மா.கா., விவசாயிகள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
த.மா.கா., விவசாயிகள் அணி பொருளாளர் ராஜேந்திரன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட சோளக்கதிர்களை கையில் ஏந்தியும், பாமாயிலை சாலையில் கொட்டியும் கோஷமிட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை கண்டித்தும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வலியுறுத்தினர்.
இது குறித்து, ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால், பாசன வாய்க்காலில் போதுமான தண்ணீர் திறப்பு இல்லாததாலும், திருச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக நெல் சாகுபடி செய்யவில்லை.
அதனால், காலம் கடந்து, திருச்சி மாவட்டத்தில், காவிரி ஆற்றின் பெருவளை வாய்க்கால் கடைமடை பாசனத்தில் உள்ள புஞ்சை சங்கேந்தி, நஞ்சை சங்கேந்தி, இ.வெள்ளனுார், இருதயபுரம் மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால் பாசனத்தில் உள்ள புள்ளம்பாடி, வெங்கடாசலபுரம், கோவாண்டங்குறிச்சி.
ஆலம்பாக்கம், புதுார் பாளையம், வானத்திரையன் பாளையம், வீரகனுார் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகள், 1,300 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். மக்கச்சோளம் விதைப்பு செய்த பின், தொடர் மழை பெய்தது.
வாய்க்காலிலும் இரண்டு, மூன்று நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், மக்காச்சோளம் சாகுபடி செய்த வயல்களில் நீர் பிடிப்பு ஏற்பட்டு, பயிர்கள் பாதித்தன.
மேலும், படைப்புழு தாக்கத்தாலும், மக்காச்சோளத்தில் விளைச்சல் பாதித்தால், ஏக்கருக்கு இரண்டு மூட்டை வரை தான் மகசூல் எடுக்க முடிந்தது. இதில் பயிர்க்காப்பீடு செய்யாதவர்களும் உள்ளனர்.
எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என்றார்.

