/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சத்துணவு கூடத்தின் கூரை பணி முடியும் முன் 'டமார்'
/
சத்துணவு கூடத்தின் கூரை பணி முடியும் முன் 'டமார்'
ADDED : நவ 02, 2025 02:25 AM
திருச்சி: திருச்சி, காட்டூரில் கட்டுமான பணி நடக்கும் போதே, சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சத்துணவு கூடம் மற்றும் பொருட்கள் வைக்கும் தனி அறை கட்ட, 7.56 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த வி.ஜி.எம்., கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஒப்பந்த நிறுவனம் சத்துணவு கூடம் கட்ட, தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கட்டுமான பணி நிறைவு பெறும் முன்பே, சத்துணவு கூடத்தின் கூரை மூன்று நாட்களுக்கு முன் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'சத்துணவு கூடத்தின் கூரையில் முறையாக, 'ரோப்பிங்' செய்யப் படாததால், சிமென்ட் கலவை தானாக உடைந்து விழுந்திருந்தது. பணிகள் நிறைவுற்ற பின், முறையாக ஆய்வு செய்து, புகார் இருப்பின் அதிகாரிகளுக்கு தெரிவிப்போம்' என்றார்.

