/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இடி விழுந்த தில் கோவில் கோபுரம் சேதம்
/
இடி விழுந்த தில் கோவில் கோபுரம் சேதம்
ADDED : மே 18, 2025 04:33 AM

திருச்சி: துறையூர் அருகே, கோணப்பாதை கிராமத்தில் உள்ள கோவிலில் இடி விழுந்ததால், கோபுரம் சேதமடைந்தது.
திருச்சி மாவட்டம், துறையூரில் நேற்று முன்தினம், இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
துறையூர் அருகே, கோணப்பாதை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் சார்பில், சக்தி மாரியம்மன் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். கடந்த எட்டு மாதங்களுக்கு முன், இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மழை பெய்த போது, இந்த கோவில் மீது இடி விழுந்ததில், கோவில் கோபுரம் சேதமடைந்தது. கோபுரத்தில் இருந்த மூன்று சுதை சிற்பங்கள் உடைந்து கீழே விழுந்தன. மற்றொரு சிற்பத்தின் தலை மட்டும் உடைந்துள்ளது. வருவாய் துறையினர், கோவிலை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.