/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கம் காவிரி மீது புதிய பாலத்திற்கு 'டெண்டர்'
/
ஸ்ரீரங்கம் காவிரி மீது புதிய பாலத்திற்கு 'டெண்டர்'
ஸ்ரீரங்கம் காவிரி மீது புதிய பாலத்திற்கு 'டெண்டர்'
ஸ்ரீரங்கம் காவிரி மீது புதிய பாலத்திற்கு 'டெண்டர்'
ADDED : மார் 15, 2024 01:28 AM

ஸ்ரீரங்கம்:திருச்சி மாநகரின் மேலசிந்தாமணி பகுதியில் இருந்து, ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வரை, 540 மீட்டர் நீளத்திற்கு, புதிதாக நான்கு வழி பாலம் அமைக்கப்பட உள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நிலத்திற்கான இழப்பீடு உட்பட புதிய பாலத்திற்கு, 106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பல நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், மேலசிந்தாமணி பகுதியில், பெரிய ரவுண்டானா அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்கு முன், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளதால், தகுதியான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் மற்றும் செலவு மதிப்பீடு தயார் செய்வதற்கு இரண்டு, மூன்று மாதங்களாகும் என்பதால், பொதுத் தேர்தலுக்குப் பின், கட்டுமானப் பணிகள் தொடங்கும். காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலத்தை கட்டி முடிக்க, 18 மாதங்கள் அவகாசம் உள்ளது.
ஸ்ரீரங்கத்துக்கும், திருச்சிக்கும் இடையிலான, 48 ஆண்டுகள் பழமையான பாலத்தில் வாகன நெரிசலை, புதிய பாலம் குறைக்கும்.

