/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஓடும் பஸ்சில் இறந்த தென்காசி வாலிபர்
/
ஓடும் பஸ்சில் இறந்த தென்காசி வாலிபர்
ADDED : நவ 07, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: தென்காசி மாவட்டம், வேதம்புதுாரைச் சேர்ந்த திருமலைக்குமார் மகன் முத்துராமன், 21. கடந்த மாதம் சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ற முத்துராமனுக்கு, மூன்று நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து 'நேஷனல்' என்ற ஆம்னி பஸ்சில், சொந்த ஊரான தென்காசிக்கு கிளம்பினார்.
நேற்று அதிகாலை துவரங்குறிச்சி அருகே பஸ்சை டீக்கடையில் நிறுத்தியபோது, முத்துராமன் எவ்வித அசைவும் இன்றி இருந்தார்.
இதுகுறித்து, துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

