/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
எல்பின் நிறுவன இரு ஏஜன்ட்கள் கைது
/
எல்பின் நிறுவன இரு ஏஜன்ட்கள் கைது
ADDED : நவ 06, 2025 02:34 AM
திருச்சி: திருச்சி, மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனம், அதிக லாபம் தருவதாக கூறி, பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்தது. ஆனால் கூறியபடி பணம் தராமல் மோசடி செய்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, எல்பின் நிறுவனத்தின் இயக்குனர்கள் அழகர்சாமி, ரமேஷ்குமார் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கில் சிக்கி, பல மாதங்களாக தலைமறைவாக இருந்த, எல்பின் நிறுவன ஏஜன்ட்கள், திருச்சியைச் சேர்ந்த பாபு, 54, ஆனந்த், 51, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

