/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இன்ஸ்டாவில் இஷ்டத்திற்கு வீடியோ போட்டவர் கைது
/
இன்ஸ்டாவில் இஷ்டத்திற்கு வீடியோ போட்டவர் கைது
ADDED : செப் 20, 2024 02:40 AM
திருச்சி:திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணிபுரியும் பிரீத்தி என்ற பெண் காவலர், தினமும் சமூக வலைதளத்தை கண்காணித்து, அதில் வரும் சட்ட விரோத மற்றும் ஆபாச செயல்கள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகிறார்.
அவர், நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை கண்காணித்த போது, ஒரு வாலிபர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை போட்டுக் கொண்டு, திரைப்பட பாடலை திருத்தி, பாலியல் தொடர்பாகவும், பெண்களை இழிவுபடுத்தியும் ஆபாசமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி பல வீடியோக்களை, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.
அவரது பதிவுகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அந்த வீடியோவை பார்ப்பவர்களின் பாலியல் உணர்வுகளை துாண்டும் வகையிலும் இருந்தது. அந்த வீடியோக்கள் வெளியிட்டவர் மீது நடவடிக்கை கோரி, பிரீத்தி பெட்டவாய்த்தலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருச்சி எஸ்.பி., வருண்குமாரின் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் வேலுார் மாவட்டம், குடியாத்தம், கொத்தமாடி குப்பத்தை சேர்ந்த கவுதம், 24, ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.
நேற்று அவரை கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் ஐ.டி.,யை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.