sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

முசிறியில் வரும் ஆண்டு கலைக்கல்லூரி: கால்நடைத்துறை அமைச்சர் தகவல்

/

முசிறியில் வரும் ஆண்டு கலைக்கல்லூரி: கால்நடைத்துறை அமைச்சர் தகவல்

முசிறியில் வரும் ஆண்டு கலைக்கல்லூரி: கால்நடைத்துறை அமைச்சர் தகவல்

முசிறியில் வரும் ஆண்டு கலைக்கல்லூரி: கால்நடைத்துறை அமைச்சர் தகவல்


ADDED : ஆக 23, 2011 01:13 AM

Google News

ADDED : ஆக 23, 2011 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியம், நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை பணியை கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் சிவபதி துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் மோகனகுமார் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் சேர்க்கையை துவக்கி வைத்து அமை ச்சர் சிவபதி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா, கிராம ப்புற ஏழை, எளிய மாணவ, மா ணவியர் கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலும், எளிதில் கல் வி பெறவும் தமிழகம் முழுவதும் உள்ள 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி ஆணையிட்டுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மாணவ, மாணவியர், உயர்வான குறிக்கோளை கொண்டு நன்றாக கல்வி பயின்று' வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சாதனையாளர்கள் அதிகமாக கிராமப்பகுதியிலிருந்து தான் வருகின்றனர். இந்த இளம் வயதில் மாணவர்கள் ஒரு துறையை தேர்வு செய்து நன்றாக படித்து, உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். இளம் வயதில் பெற்றோரை வணங்கி நல்ல மரியாதை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என பஞ்., யூனியன் குழுத் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். வரும் ஆண்டில் நமது தொகுதியில் கலைக்கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில் பள்ளி மாணவ, மாணவியர் வருகைக்கேற்ப காலை, மாலை பஸ்கள் கூடுதல் 'ட்ரிப்' (நடை) இயக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தனது தாயாரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சரோஜா ரெங்கராஜன் அறக்கட்டளை சார்பில் இப்பள்ளியில் எஸ்.எஸ்.எ ல்.ஸி., தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவி ரேணுகா, அபிராமி, நிவேதா ஆகியோருக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். தனது சொந்த நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் பள்ளிக்கு வழங்கினார். முன்னதாக தலைமை ஆசிரியர் நாகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மலர்கொடி, பஞ்., யூனியன் குழுத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பஞ்., உறுப்பினர் நெடுமாறன், துணைத்தலைவர் சேதுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us