sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

"பொருளாதார ரீதியாக கண்டுபிடிப்பு இருக்கணும்' ரயில்வே நிதி தொடர்பான கூட்டத்தில் தகவல்

/

"பொருளாதார ரீதியாக கண்டுபிடிப்பு இருக்கணும்' ரயில்வே நிதி தொடர்பான கூட்டத்தில் தகவல்

"பொருளாதார ரீதியாக கண்டுபிடிப்பு இருக்கணும்' ரயில்வே நிதி தொடர்பான கூட்டத்தில் தகவல்

"பொருளாதார ரீதியாக கண்டுபிடிப்பு இருக்கணும்' ரயில்வே நிதி தொடர்பான கூட்டத்தில் தகவல்


ADDED : ஆக 21, 2011 02:11 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: ''கண்டுபிடிப்பு என்பது பொருளாதார ரீதியாக இருக்க வேண்டும்,'' என 'பிம்' இயக்குனர் பாலபாஸ்கர் பேசினார்.

கடந்த 1981ம் ஆண்டு இந்தியன் ரயில்வே சர்வீஸ் தேர்வெழுதி பல்வேறு பகுதியில் பணியாற்றும் 7 அதிகாரிகளுக்கு இø டயேயான கருத்தரங்கு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கட்டுப்பாட்டு அறையில் நடந்தது. நிதி மற்றும் புதிய கண்டுபிடிப்பு வளர்ச்சி குறித்த இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'பிம்' இயக்குனர் பாலபாஸ்கர் பேசுகையில், ''கண்டுபிடிப்பு என்பது பொருளாதார ரீதியாக இருக்க வேண்டும். அப்போது தான் புதிய கண்டுபிடிப்பு என்று கூறலாம். எந்த அமைப்பாக இருந்தாலும் புதிய கண்டுபிடிப்பு மார்க்கெட்டுக்கு அவசியம்,'' என்றார்.



குர்கான் எம்.டி.ஐ., விரிவுரையாளர் ஆனந்த்குமார் சர்மா, ''இந்தியன் ரயில்வே ஊழியர்களிடமிருந்து கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த துறையில் இருப்பவர்கள் தான் என்ன வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு கண்டுபிடிப்புகளை கண்டறிவர். வாடிக்கையாளர் விரும்பும் வகையில் புதிய கண்டுபிடிப்பு இருக்க வேண்டும். இந்தியன் ரயில்வே தொழிலாளர்களை ஊக்குவிக்க 5,000 ரூபாய் தருகிறேன்,'' என்றார்.



திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம், ''தொழிலாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பொன்மலையில் 'ஆட்டோமேட்டிக் அப்ளை பிரேக்' கண்டுபிடித்துள்ளோம். கேட்கீப்பருக்கான 'அலராம்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை 'பீப்' சத்தம் வரும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த தொகையை எங்களுக்கே வழங்கலாம்,'' என்றார்.



மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் நிதி இயக்குனர் நிஷித் மோகன் மிஸ்ரா, ''உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் மும்பை ரயில்வே வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 7 மில்லியன் பயணிகள் மும்பை ரயிலில் பயணிக்கின்றனர்,'' என்றார். பந்தனா மிஸ்ரா, ''மாற்றம் மட்டுமே நிரந்தம். மாற்றத்துக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பார்க்க முடியாத ஒன்றை உணர முடிந்தவர்களால் தான் சாதனை நிகழ்த்த முடியும்,'' என்றார்.



கிழக்கு ரயில்வே நிதி ஆலோசகர் அலோக் விஸ்வாஸ், ''அடிப்படையான, 'மெக்கானிக்' உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். தணிக்கையில் இரண்டு வகை உள்ளது. காரில் ஆக்ஸலேட்டர் எவ்வளவு முக்கியமோ, அதே போல தேவையான நேரத்தில் நிறுத்த உதவும், 'பிரேக்' அவ்வளவு முக்கியம். எந்த அமைப்பாக இருந்தாலும் சமநிலையுடன் செயல்பட வேண்டும்,'' என்றார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் வைத்தியலிங்கம், ''இந்தியன் ரயில்வே ஜூலை 2001ம் ஆண்டு நிதி தட்டுப்பாடு நிலவியது. கட்டணம் அதிகம் இருந்தது. அதை மாற்றியமைக்கும் வகையில் மறுகட்டமைப்பு செய்தனர். ஏழைகளும் பயணிக்கும் வகையில் இந்தியன் ரயில்வே லாபகரமாக இயங்குகிறது,'' என்றார். இர்கான் நிதி செயல் இயக்குனர் பந்தனா நந்தா, வனிதா வைத்தியலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us