/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் 21 வார்டுகளில் மும்முரம்
/
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் 21 வார்டுகளில் மும்முரம்
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் 21 வார்டுகளில் மும்முரம்
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் 21 வார்டுகளில் மும்முரம்
ADDED : செப் 07, 2011 11:57 PM
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி முழுவதும் மாநகராட்சி வார்டுகளை கொண்டுள்ளதால், வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் உட்பட தேர்தல் வேலையில் மாநகராட்சி நிர்வாகம் மும்மரமாக ஈடுபட்டுள்ளது.திருச்சி மேற்கு தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் மரியம்பிச்சை வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நேரு தோல்வியடைந்தார்.அமைச்சராக பதவிபேற்ற மரியம் பிச்சை பெரம்பலூர் அருகே நடந்த லாரி விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி மேற்கு தொகுதி, மாநகராட்சியின் எல்லைக்குள்ளே அமைந்துள்ளதால், வாக்காளர் பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற தேர்தல் பணியை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.பொன்மலை கோட்டத்திலும், கோ.அபிஷேகபுரம் கோட்டத்திலும் மொத்தம் 21 வார்டுகள் மேற்கு தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொகுதியில் 98 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 713 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் நான்கு பேர் உட்பட ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 950 மொத்த வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர்கள் எண்ணிக்கை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டப்பின் கூடுவோ, குறையவோ வாய்ப்புள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.