/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி துவக்கம்

ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அக்., 13ம் தேதி நடக்கிறது.
இதற்கான அனைத்து தேர்தல் பணிகளும் முழுவீச்சில் நடக்கிறது. மேலும், தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி இன்று நடக்கிறது.காலை 10 மணிக்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும்அலுவலர் அலுவலகம் மற்றும் திருச்சி தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் (பொது) ஆர்.கே.,பதக் முன்னிலையில் இப்பணி நடக்கிறது. அன்று அனைத்து வேட்பாளர்களும் தாங்களோ அல்லது தங்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளோ உரிய அடையாள அட்டையுடன் தவறாது பங்கேற்க வேண்டும்.திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பத் கூறியதாவது:வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு இவைகள் இரண்டை மட்டுமே ஆதாரமாக கொண்டு வாக்களிக்க இயலும். இதர ஆவணங்களை கொண்டு வாக்களிக்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டினை கொண்டு வாக்களிக்க வேண்டும்.