/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆந்திர கல்லுாரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி பலி
/
ஆந்திர கல்லுாரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி பலி
ஆந்திர கல்லுாரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி பலி
ஆந்திர கல்லுாரி மாணவர்கள் இருவர் கிணற்றில் மூழ்கி பலி
ADDED : ஏப் 20, 2025 11:51 PM
திருச்சி : திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், ஆந்திராவைச் சேர்ந்த மடால வெங்கடேஷ், 19, வேலுகு லட்சுமி அரவிந்த், 19, ஆகிய இருவர், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள், சில நண்பர்களுடன் சேர்ந்து, சமயபுரத்தில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
சமயபுரம் கோவில் முடிமண்டபம் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், நண்பர்களுடன் குளிக்க சென்றனர். நீச்சல் தெரியாததால் வெங்கடேஷ், தண்ணீரில் மூழ்கினார். அரவிந்த், காப்பாற்ற சென்றபோது அவரும் மூழ்கினார். சமயபுரம் தீயணைப்பு படையினர், வெங்கடேஷ், அரவிந்த் உடலை மீட்டனர். சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.