வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் :பாதுகாப்பாக வெடிக்க வைத்து அழிப்பு
வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் :பாதுகாப்பாக வெடிக்க வைத்து அழிப்பு
UPDATED : அக் 28, 2026 09:39 PM
ADDED : அக் 28, 2026 09:18 PM
திருச்சி: ராணுவத்தினருக்கான பயிற்சியின்போது, வெடிக்காமல் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், பாதுகாப்பான முறையில் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே வீரமலை என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு, பல்வேறு பிரிவு ராணுவ வீரர்களுக்கு, ராக்கெட் லாஞ்சர் ஏவுதல், துப்பாக்கி சுடுதல், வெடிகுண்டுகளை கையாளுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அப்படியாக ராணுவத்தினர் பயிற்சியின் போது, வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டுகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அப்பகுதி கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வெடிகுண்டு செயல் இழப்புப்பிரிவு போலீசார், அப்பகுதிக்கு சென்று, 16 வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி, அவற்றை ஆழமான குழிகள் தோண்டி, பாதுகாப்பான முறையில் புதைத்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலையில், மேற்கண்ட, 16 குண்டுகளையும், 10 அடி ஆழத்தில் புதைத்து, வெடிக்க வைத்து அழித்தனர்.
