/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கணவனுடன் தகராறில் பெண் துாக்கிட்டு தற்கொலை
/
கணவனுடன் தகராறில் பெண் துாக்கிட்டு தற்கொலை
ADDED : அக் 26, 2025 02:19 AM
திருச்சி: மணப்பாறையில், குடும்பத் தகராறு காரணமாக, வீட்டில் இருந்து மாயமான இளம் பெண், மரத்தில் துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மனைவி பழனியம்மாள், 21. அக்., 20ம் தேதி, கணவருடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு சென்றுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், முருகேசன் கொடுத்த புகார்படி, வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, பழனியம்மாளை தேடினர். இந்நிலையில், நேற்று, சீகம்பட்டி அருகே மலை மீது உள்ள மரத்தில், துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
வனத்துறையினர் கொடுத்த தகவல்படி, வையம்பட்டி போலீசார், பழனியம்மாள் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
திருமணமாகி இரண்டரை ஆண்டுகளாவதால், ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.,சீனிவாசன் விசாரணை நடத்தினார்.

