/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தொழிலாளி தலை துண்டித்து பழிக்குப்பழியாக படுகொலை
/
தொழிலாளி தலை துண்டித்து பழிக்குப்பழியாக படுகொலை
ADDED : செப் 05, 2025 01:14 AM
திருச்சி,:திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், 35; கூலித்தொழிலாளி.
கடந்த, 2024ல், சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில், ஆலத்துடையான்பட்டியைச் சேர்ந்த தியாகு என்பவர் கொலை வழக்கில், சுரேஷ் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில், சுரேஷ், தொட்டியம் அருகே உள்ள முள்ளிப்பாடியில் சில மாதங்களாக வசித்தார். நேற்று முன்தினம் இரவு, முள்ளிப்பாடி பஸ் ஸ்டாப்பில் நின்ற சுரேஷை, இரு பைக்குகளில் வந்த நால்வர் வெட்டி கொலை செய்து, தலையை தனியாக துண்டித்து எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து, தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், தியாகு கொலைக்கு பழிக்குப்பழியாக, சுரேஷை, ஆலத் துடையான்பட்டியைச் சேர்ந்த தியாகுவின் சகோதரர்கள் கல்பேஸ், 35, கவியரசன், 32, பிரவீன், 31, உறவினர்கள் அஸ்வின்குமார், 26, பரமேஸ்வரன், 26, ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. நேற்று ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
சுரேஷ் தலை முள்ளிப்பாடி ஏரி முட்புதரில் மீட்கப்பட்டது. கொலையில் தொடர்புடைய, மேலும் இரண்டு பேரை போலீசார் தேடுகின்றனர்.