தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பாதுகாப்பு வசதிகள் கேட்டு தொழிலாளர்கள் மறியல்

பாதுகாப்பு வசதிகள் கேட்டு தொழிலாளர்கள் மறியல்

பாதுகாப்பு வசதிகள் கேட்டு தொழிலாளர்கள் மறியல்


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட்டில், ஜமீல் என்ற தனியார் இரும்பு நிறுவனத்தில், நான்கு நாட்களுக்கு முன், உ.பி.,யைச் சேர்ந்த கோவிந்தகுமார், 33, இரும்பு குழாய் தலையில் விழுந்து உயிரிழந்தார். இதற்கு, பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் எனக்கூறி, நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சக தொழிலாளர்கள் சிலரை, நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.

இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று காலை, திருச்சி – திண்டுக்கல் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், சிப்காட் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி, தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கக்கூடாது என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us