/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பறிமுதல் செய்த ரூ.1.57 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
பறிமுதல் செய்த ரூ.1.57 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
பறிமுதல் செய்த ரூ.1.57 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
பறிமுதல் செய்த ரூ.1.57 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
UPDATED : ஏப் 09, 2024 07:54 AM
ADDED : ஏப் 09, 2024 07:52 AM
பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனைச்சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் கவுரி தலைமையில் கடந்த, 23 மற்றும், 27ல் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மினி லாரியில் வந்த தேவராஜபாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி உரிய ஆவணமின்றி எடுத்து வந்த, 68,000 ரூபாய், மணிகண்டன் எடுத்து வந்த, 89,220 ரூபாய் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி சார் கருவூலத்தில் ஒப்பத்தனர்.
இதையடுத்து அவர்கள், கலெக்டரின் மேல் முறையீட்டு குழுவிடம் முறையிட்டனர். மேல் முறையீட்டு குழு உத்தரவின் படி, நேற்று உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், ஆகியோர் குப்புசாமிக்கு, 68,000 ரூபாயும், மணிகண்டனுக்கு, 89,220 ரூபாய் என, மொத்தம், 1,57,220 ரூபாயை வழங்கினர்.