/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க உத்தரவு
/
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க உத்தரவு
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க உத்தரவு
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க உத்தரவு
ADDED : நவ 01, 2025 02:28 AM

வேலுார்: தொடர்மழை காரணமாக, வேலுார் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்து, ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் வெள்ளம் புகுந்த நிலையில், நிரந்தர தீர்வுக்கு விஜய நகர நாயக்கர் கால அகழி நீர்வழிப்பாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மோந்தா புயல் காரணமாக, வேலுாரில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையால்,வேலுார் கோட்டை அகழியின் நீர்மட்டம் உயர்ந்து, கோட்டையினுள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
விஜயநகர நாயக்கர்கள் காலத்தில் கோட்டை அகழியில் நீர்மட்டம் அதிகரிக்கும் போது, உபரி நீர் வெளியேற இரண்டு நீர்வழிப்பாதைகள் இருந்தன. தற்போது நீர்வழிப்பாதைகள் துார்ந்து, உபரி நீர் வெளியேற முடியாமல், கோவில் வளாகத்தில் நீர் தேங்குகிறது.
தற்போது, கோவில் நிர்வாகம் சார்பில் இரு ராட்சத மோட்டார்களை வைத்து 24 மணி நேரமும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. 5வது நாளான நேற்று ஓரளவு மழைநீர் வடிந்தது.
இந்நிலையில், கோவிலில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் சுப்புலட்சுமி கூறியதாவது:
ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும். மீன் மார்க்கெட், பழைய பைபாஸ் சாலை அருகே கோட்டை அகழியின் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

