/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கைவிலங்குடன் தப்பிய கைதி மலையில் சிக்கினார்
/
கைவிலங்குடன் தப்பிய கைதி மலையில் சிக்கினார்
ADDED : ஆக 25, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் அருகே, போலீசாரிடமிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி, போலீசில் சிக்கினார்.
வேலுார் மாவட்டம் காட்பாடி, தாராப்படவேடு பகுதியை சேர்ந்தவர் காமேஷ், 23; கஞ்சா வழக்கில், காட்பாடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அப்போது கைவிலங்கு போட்டிருந்த காமேஷ், போலீசார் பிடியிலிருந்து தப்பியோடினார். போலீசார் இரு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
வேலுாரை அடுத்த கசம் மலையில் பதுங்கியிருந்த காமேஷை, போலீசார் நேற்று பிடித்தனர். அவருக்கு துணையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

