/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
/
மெக்கானிக் உடல் அழுகிய நிலையில் வீட்டில் மீட்பு
ADDED : அக் 01, 2025 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்; வீட்டில் அழுகிய நிலையில், மெக்கானிக் சடலம் கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் அடுத்த சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 55; டூ - -வீலர் மெக்கானிக். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் நகரில் வசித்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், சீனிவாசன் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக, அரியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, கட்டிலில் இறந்த நிலையில், உடல் அழுகியவாறு சீனிவாசன் சடலம் கிடந்தது. அரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.