/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கலெக்டர் போல் நடித்து ரூ.80 லட்சம் சுருட்டிய பெண் கைது
/
கலெக்டர் போல் நடித்து ரூ.80 லட்சம் சுருட்டிய பெண் கைது
கலெக்டர் போல் நடித்து ரூ.80 லட்சம் சுருட்டிய பெண் கைது
கலெக்டர் போல் நடித்து ரூ.80 லட்சம் சுருட்டிய பெண் கைது
ADDED : அக் 01, 2025 08:04 AM

வேலுார்; கல்லுாரி பேராசிரியர் உள்ளிட்டோரிடம், 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி பெண் கலெக்டர் போலீசாரிடம் சிக்கினார்.
சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் கிளாடிஸ் குணா, 24; கடந்த, 2018 முதல், 2021 வரை வேலுாரில், ஊரிசு கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்தார். அதே துறையில் காட்பாடியைச் சேர்ந்த ரூபேஷ் சதீஷ்குமார், 42, என்பவர் பேராசிரியர்.
இந்நிலையில், தான் ஐ.ஏ.எஸ்., ஆக விரும்புவதாகவும், தனக்கு புற்று நோய் இருப்பதாகவும் கூறி, படிப்புக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் நிதி உதவி செய்யுமாறு ரூபேஷ் சதீஷ்குமாரிடம், 2024 ஜனவரியில் கிளாடிஸ் குணா உதவி கேட்டு உள்ளார்.
தொடர்ந்து, 16 லட்சம் ரூபாயை பேராசிரியர் பரிமாற்றம் செய்தார். மேலும், வாட்ஸாப் குழு மூலம் நிதி திரட்டி, 54 லட்சம் ரூபாய் கிளாடிஸ் குணாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
இது தவிர விளம்பரங்கள் மூலமாகவும் அவருக்கு, 10 லட்சம் ரூபாய் நிதி கிடைத்தது. கடந்த, 2024 ஜனவரி முதல், 2025 ஜூலை வரை அவரது வங்கி கணக்கிற்கு, 80 லட்சம் ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று விட்டதாகவும், உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் பயிற்சியில் இருப்பதாகவும் கூறி, ரூபேஷ் சதீஷ்குமாருக்கு, கிளாடிஸ் குணா அடையாள அட்டை புகைப்படத்தை அனுப்பி உள்ளார். அந்த அடையாள அட்டை போலி என, பேராசிரியருக்கு தெரிந்தது.
ரூபேஷ் சதீஷ்குமார் புகாரின்படி, வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில், கிளாடிஸ் குணா மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.