/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
/
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
ADDED : அக் 02, 2025 07:53 AM
காட்பாடி: வேலுார் மாவட்டம், காட்பாடியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கசம் பகுதியில் உள்ள பிரிட்டிஷ் பங்களா அருகே சப் - இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மொத்த மாத்திரை வியாபாரி ஒருவர் சில்லறை வியாபாரிகளுக்கு மாத்திரைகளை பிரித்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அங்கிருந்த நபர்களிடம் போலீசார் விசாரித்தனர்.
அந்த சம்பவத்தில், 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 12 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்களில் மும்பை மற்றும் சென்னையை சேர்ந்த மருத்துவ பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை, தரமணியை சேர்ந்த வினோத்குமார், 27, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த நிகிதா ஹேமந்த் டாங்டி, 26, கிரிஷ் டாங்டி, 27, கிழக்கு மும்பையைச் சேர்ந்த நிகல் ராஜேஷ், 34, ஆகியோரிடம் வேலுாரில் நடத்திய விசாரணையில் சென்னை மற்றும் வேலுாரைச் சேர்ந்த நபர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கியது உறுதியானது.
மேலும் அவர்களிடமிருந்து 2100 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை நேற்று கைது செய்தனர்.