/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
/
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
ADDED : அக் 02, 2025 07:56 AM
திருவலம்; வேலுார் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் அடுத்த குகையநல்லூரை சேர்ந்தவர் மோகன் குமார், 53; வேளாண்மை துறையில் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, மனைவி, குழந்தைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மோகன் குமாரின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பினர். அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மற்றும் டி.வி.ஆர்., எனப்படும் கேமரா பதிவு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு மோகன் குமார் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.