/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
100 நாள் பணியாளர்கள் சிறுத்தை தாக்க வந்ததால் ஓட்டம்
/
100 நாள் பணியாளர்கள் சிறுத்தை தாக்க வந்ததால் ஓட்டம்
100 நாள் பணியாளர்கள் சிறுத்தை தாக்க வந்ததால் ஓட்டம்
100 நாள் பணியாளர்கள் சிறுத்தை தாக்க வந்ததால் ஓட்டம்
ADDED : பிப் 15, 2025 01:46 AM
குடியாத்தம்,:நுாறு நாள் வேலை செய்த பெண்களை சிறுத்தை தாக்க வந்ததால், அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் பஞ்.,க்குட்பட்ட காந்திநகர் கல்லேரி பகுதியில், நேற்று காலை 9:00 மணியளவில், 20க்கும் மேற்பட்ட பெண்கள், அங்கு வனப்பகுதியை ஒட்டியுள்ள ஓடையை, துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வந்த ஒரு சிறுத்தை, அங்கு வேலை செய்த பெண்களை தாக்க பாய்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். உடனே, பதறிய சிறுத்தை அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பெண்களும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
லட்சுமி, கஸ்துாரி ஆகிய இரு பெண்கள் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து, பஞ்., தலைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் வனத்துறையினருக்கு பெண்கள் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் நேரில் சென்று, அதிர்ச்சியில் இருந்த பெண்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது, 'இப்பகுதியில் நீண்ட நாட்களாக சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெண்கள் வலியுறுத்தினர்.