/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'மகளிருக்கு தி.மு.க.,வில் 50 சதவீத ஒதுக்கீடு'
/
'மகளிருக்கு தி.மு.க.,வில் 50 சதவீத ஒதுக்கீடு'
ADDED : செப் 10, 2024 06:26 AM
வேலுார்: ''தமிழக சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 66 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை வழங்கி, அவர் நேற்று பேசியதாவது:
இந்தியாவிலேயே பெண்களுக்கு உள்ளாட்சிகளில், 33 சதவீத இட ஒதுக்கீட்டை முதன் முதலாக தமிழகத்தில் வழங்கினோம். பின் அது, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
பெண்கள் முன்னேற்றமடைய தமிழக சட்டசபை தேர்தலில், 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.
இதேபோல் மத்திய அரசும் பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க முன் வர வேண்டும். பெண்கள் முன்னேற்றமடைந்தால், அந்த நாடு முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.