ADDED : ஏப் 07, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த தனியார் பல்கலைக்கழகம் எதிரே, வேளாண்துறை அலுவலர் ப்ரீத்தா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று, வாகன தணிக்கை நடத்தினர்.
அப்போது, கரிகிரி பகுதியிலிருந்து வந்த, தனியார் வங்கியின் ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி, 7.27 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பணத்தை பறிமுதல் செய்து, காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

