/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சென்னையில் தப்பி வேலுாரில் சிக்கினோம் ஏ.டி.எம்., கொள்ளையர்கள் வாக்குமூலம்
/
சென்னையில் தப்பி வேலுாரில் சிக்கினோம் ஏ.டி.எம்., கொள்ளையர்கள் வாக்குமூலம்
சென்னையில் தப்பி வேலுாரில் சிக்கினோம் ஏ.டி.எம்., கொள்ளையர்கள் வாக்குமூலம்
சென்னையில் தப்பி வேலுாரில் சிக்கினோம் ஏ.டி.எம்., கொள்ளையர்கள் வாக்குமூலம்
ADDED : ஜன 01, 2026 06:04 AM

காட்பாடி: சென்னையில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் திருடிய வட மாநில இளைஞர்கள், வேலுாரில் கொள்ளையடிக்க முயன்ற போது பிடிபட்டனர்.
வேலுார் மாவட்டம், விருதம்பட்டு பகுதியில் ஐ.டி.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த 26ம் தேதி, அந்த ஏ.டி.எம்., மையத்தில் உள்ள பணம் வழங்கும் இயந்திரத்தில், பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியர்கள் வந்தனர்.
அப்போது, யாரோ ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரிந்தது. அந்த தகவலை, ஏ.டி.எம்., மைய காவலாளிக்கு தெரிவித்தனர்.
அதன் படி, காவலாளி தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், இரண்டு இளைஞர்கள் ஏ.டி.எம்., மையத்திற்குள் சென்றதை பார்த்தார்.
அவர்களின் உருவம், ஏற்கனவே திருட முயன்றவர்களின் கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் ஒத்து போயிருந்தது. உடனே அந்த காவலாளி, விருதம்ப ட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு இளைஞர்களையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பலராம், 26, வட மேற்கு டில்லியை சேர்ந்த தர்மேந்திரா, 25, என்பது தெரிந்தது. ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த இருவரையும், விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர்.

