/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
தீயில் எரிந்து ஏ.டி.எம்., இயந்திரம் நாசம்
/
தீயில் எரிந்து ஏ.டி.எம்., இயந்திரம் நாசம்
ADDED : டிச 16, 2025 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுாரில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., இயந்திரம் தீயில் எரிந்து நாசமானது.
வேலுார் மாவட்டம், விருப்பாட்சிபுரத்தில், எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இந்த இயந்திம் நேற்று இரவு, திடீரென தீ பிடித்து எரிந்தது. அப்போது பணம் எடுக்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏ.டி.எம் இயந்திரத்தின் இரும்பு பெட்டியில் பல லட்ச ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

