/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
பணி பிடிக்கவில்லையாம் ராணுவ வீரர் தற்கொலை
/
பணி பிடிக்கவில்லையாம் ராணுவ வீரர் தற்கொலை
ADDED : ஜூலை 24, 2024 07:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம், காட்பாடி அரும்பருத்தியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ராமன், 40.
கடந்த, 40 நாட்களுக்கு முன், ராணுவ முகாமிலிருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பெற்றோரிடம், தனக்கு ராணுவ வேலை பிடிக்கவில்லை என கூறி, மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.