/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ரூ.12.31 லட்சம் கொள்ளையில் உடன் சென்றவர், 5 பேர் கைது
/
ரூ.12.31 லட்சம் கொள்ளையில் உடன் சென்றவர், 5 பேர் கைது
ரூ.12.31 லட்சம் கொள்ளையில் உடன் சென்றவர், 5 பேர் கைது
ரூ.12.31 லட்சம் கொள்ளையில் உடன் சென்றவர், 5 பேர் கைது
ADDED : ஜூன் 21, 2024 12:53 AM
வேலுார்:வேலுார் ஆர்.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் நபீஸ், 28, தனியார் நிதி நிறுவன கலெக்ஷன் ஏஜன்ட். இவரின் கீழ் பணிபுரியும், அதே பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன், 29, பல பகுதிகளுக்கு சென்று பணம் வசூலித்து, நபீஸிடம் ஒப்படைத்து வந்தார். இவர், கடந்த மே 14ல் திருத்தணி, அரக்கோணம் பகுதிகளில் பணம் கலெக்ஷன் செய்ய, உதவிக்கு நண்பர் ஆசிப், 25, என்பவரை அழைத்து சென்றார். இருவரும், 12.31 லட்சம் ரூபாயை வசூலித்து வேலுாருக்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர்.
பைக்கை நிஜாமுதீன் ஓட்டினார். அன்றிரவு, 7:50 மணிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தென்நந்தியாலம் பூஞ்சோலை நகர் அருகே காரில் வந்த கும்பல், நிஜாமுதீனை மடக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பியது. ரத்தினகிரி போலீசார் விசாரித்ததில், நிஜாமுதீன் உடன் சென்ற நண்பர் ஆசிப் கொடுத்த தகவலின்படி, வேலுார் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர், பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து, அந்த ஆறு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1.60 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடுகின்றனர்.