/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
'இன்ஸ்டா' சிறுமிக்காக மோதல் தாக்கிய 10 பேர் மீது வழக்கு
/
'இன்ஸ்டா' சிறுமிக்காக மோதல் தாக்கிய 10 பேர் மீது வழக்கு
'இன்ஸ்டா' சிறுமிக்காக மோதல் தாக்கிய 10 பேர் மீது வழக்கு
'இன்ஸ்டா' சிறுமிக்காக மோதல் தாக்கிய 10 பேர் மீது வழக்கு
ADDED : செப் 11, 2024 04:42 AM
ஒடுகத்துார் : வேலுார் மாவட்டம், ஒடுகத்துாரை அடுத்த தோளப்பள்ளி பஞ்., காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கவுரிசங்கர், 25; அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத், 25. கூலி தொழிலாளிகளான இருவரும், 17 வயது சிறுமி ஒருவரிடம், 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் பழகி வந்தனர். இருவரும் தனித்தனியே காதலை தெரிவித்தபோது, சிறுமி ஏற்கவில்லை.
இந்நிலையில், சிறுமியிடம் கவுரிசங்கர் பழகுவதையறிந்த ஸ்ரீநாத், நேற்று முன்தினம் கவுரிசங்கர் வீட்டிற்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கினார்.
கவுரிசங்கரும், தன் உறவினர் மற்றும் நண்பர்கள் என, 10க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு, ஸ்ரீநாத் வீட்டிற்கு சென்று, அவரை தாக்கினார். ஸ்ரீநாத் உறவினர்களும், பதிலுக்கு தாக்கினர்.தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார், இரு தரப்பைச் சேர்ந்த, 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். தனக்காக இரண்டு வாலிபர்கள் அடித்துக் கொண்டதை அறிந்த சிறுமி, வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கிராமப்புறங்களிலும் சமூக வலைதளங்களின் மோசமான தாக்கம் அதிகரித்திருப்பதையும், அதனால் பல அப்பாவிகள் நிம்மதி இழந்து தவிப்பதையும் இந்த சம்பவம் காட்டுகிறது.