ADDED : செப் 08, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம் : வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 42 வயது ஆசாமி, ஆம்பூர் தனியார் ஷூ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் ஒன்பதாவது படிக்கும் தன் 13 வயது மகளை, தனியாக இருக்கும் நேரங்களில் மிரட்டி, ஐந்து மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்துச் சென்றார்.
பரிசோதித்ததில் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.