/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஒன்றிய பா.ஜ., கலைப்பு: மாவட்ட தலைவர் அதிரடி
/
ஒன்றிய பா.ஜ., கலைப்பு: மாவட்ட தலைவர் அதிரடி
ADDED : ஏப் 22, 2024 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: வேலுார் லோக்சபா தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.
குடியாத்தம் சட்டசபை தொகுதி பேரணாம்பட்டில் அமைக்கப்பட்ட 'பூத்'களில், பா.ஜ.,வினர் இல்லை. இதுகுறித்து பா.ஜ., தலைமைக்கு புகார் சென்றதால், வேலுார் மாவட்ட தலைவர் மனோகரன் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பேரணாம்பட்டு, பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏப்., 20ம் தேதி முதல், பேரணாம்பட்டு ஒன்றியம் கலைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.

