/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
புவனகிரியில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்
/
புவனகிரியில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 04, 2024 03:26 AM

புவனகிரி : புவனகிரியில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புவனகிரி தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் நகர செயலாளர் கந்தன் வரவேற்றார்.
தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அமுதாராணி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் இல்லம் தோறும் இளைஞரணி, மகளிர் அணி உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது, வரும் 17 ம் தேதி நடக்கும் முப்பெரும் விழாவை வெகு சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் மாறன், நகர அவைத் தலைவர் நெடுமாறன் மற்றும் புவனகிரி பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கிளை கழக செயலாலர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், சார்பு அணிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.