/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வெள்ளத்தோடு சென்ற பாலம் 10 கிராம போக்குவரத்து 'கட்'
/
வெள்ளத்தோடு சென்ற பாலம் 10 கிராம போக்குவரத்து 'கட்'
வெள்ளத்தோடு சென்ற பாலம் 10 கிராம போக்குவரத்து 'கட்'
வெள்ளத்தோடு சென்ற பாலம் 10 கிராம போக்குவரத்து 'கட்'
ADDED : ஆக 24, 2024 02:12 AM
வேலுார்:வேலுார் மாவட்டம் மேல்மொணவூர் - திருமணி இடையே பாலாற்றின் குறுக்கே மண்ணாலான தரைப்பாலம் இருந்தது.
இதன் வழியாக லத்தேரி, திருமணி, அன்னங்குடி, கனகசமுத்திரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், இங்கு அமைக்கப்பட்டிருந்த பாதை முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால் பஞ்., சார்பில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்கிறது. ஒடுகத்துார், உத்திரகாவேரி பகுதிகளில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பள்ளிகொண்டா வழி பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது. நேற்று முன்தினம் இரவு தண்ணீர் வரத்து மேலும் அதிகமானது.
இதில் திருமணி - மேல்மொணவூர் இடையே அமைக்கப்பட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 10 கிராமங்களை சேர்ந்த மக்கள், 12 கி.மீ., சுற்றி வேலுாருக்கு வந்து செல்கின்றனர்.

