/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வேலுார் அருகே செம்மரக்கட்டை பறிமுதல்
/
வேலுார் அருகே செம்மரக்கட்டை பறிமுதல்
ADDED : பிப் 22, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.வேலுார் மாவட்டம், அரியூர் போலீசார் நேற்று அதிகாலை, 1:30 மணியளவில் அரியூர் அடுத்த ஏரி கோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தினர்.
அப்போது, காரினுள் இருந்த மூன்று பேர், போலீசாரை கண்டதும் தப்பினர். போலீசார் காரை சோதனை நடத்தியதில், காரின் பின்பகுதியில், 13 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. செம்மரக்கட்டையுடன் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.