/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் மீட்பு
/
கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் மீட்பு
ADDED : ஏப் 09, 2024 07:54 AM
பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துார்
அடுத்த வத்தல்மலை பால் சிலம்பு பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் ஏதேனும்
இருக்கும் பட்சத்தில், ஊர் பொது இடத்தில் வீசப்பட்டால் வழக்கு ஏதும்
தொடராமல் தங்களுக்கு துப்பாக்கியை ஒப்படைக்க வாய்ப்பு வழங்குவதாக,
வனத்துறையினால் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பால் சிலம்பு கிராம வன
குழு தலைவர் பூபாலன், ஊர் மக்களை ஒன்று கூட்டி, ஊர் கட்டுப்பாடு விதித்து,
கள்ள நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மாரியம்மன் கோவில் அருகே போட்டு
விடுமாறு கூறினார். இதன் விளைவாக, நேற்று முன்தினம், மாரியம்மன் கோவில்
முன்பு, 4 நாட்டு துப்பாக்கிகள் வீசப்பட்டது. தகவலின் படி, மொரப்பூர்
வனச்சரக அலுவலர் ஆனந்த் குமார் தலைமையில் வனச்சரக குழுவுடன் சென்று,
வீசப்பட்ட, 4 கள்ள நாட்டு துப்பாக்கிகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.

