/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
மாணவிக்கு பிரசவம் 45 வயது நபருக்கு 'போக்சோ'
/
மாணவிக்கு பிரசவம் 45 வயது நபருக்கு 'போக்சோ'
ADDED : மே 30, 2024 02:12 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர் சுவாமிநாதன், 45. இவர், 16 வயதான பிளஸ் 1 மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, ஒன்றரை ஆண்டுகளாக, அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். மாணவிக்கு சில நாட்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டது.
அவரை, வேலுார் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
பரிசோதனையில் மாணவி நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கேட்டபோது, சுவாமிநாதன் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறினார்.
இந்நிலையில், அந்த மாணவிக்கு இரண்டு நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, சுவாமிநாதனை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.