/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிர் தப்பினார்
/
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிர் தப்பினார்
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிர் தப்பினார்
100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி டிரைவர் உயிர் தப்பினார்
ADDED : ஆக 02, 2024 10:55 PM
வேலுார்,:வேலுார் அருகே, 100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; லாரி டிரைவர் உயிர் தப்பினார்.
ஆந்திரா, கர்நாடகாவிற்கு செல்லும் மலைப்பாதை கிராமமான பத்தலப்பள்ளி, வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது. இந்த மலைப்பாதை கிராமத்தின் வழியாக சென்னைக்கு தினமும், காய்கறிகள், பழங்கள் ஏற்றி கொண்டு ஏராளமான லாரிகள் செல்கின்றன. நேற்று முன்தினம் இரவு, பெங்களூருவில் இருந்து, சென்னை நோக்கி காய்கறிகளை ஏற்றி சென்ற லாரி பத்தலப்பள்ளி மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது.
லாரியை பெங்களூருவை சேர்ந்த டிரைவர் பாபாஜான் ஓட்டி சென்றார். மலைப்பாதை முதல் வளைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மரக்கிளைகள் மீது விழுந்து பல்டி அடித்தபோது, லாரி டிரைவர் மரக்கிளைகளை பிடித்து உயிர் தப்பினார். பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.