/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
கிரிவல பாதையில் பைக் சாகசம் வீடியோ வெளியிட்டவர் கைது
/
கிரிவல பாதையில் பைக் சாகசம் வீடியோ வெளியிட்டவர் கைது
கிரிவல பாதையில் பைக் சாகசம் வீடியோ வெளியிட்டவர் கைது
கிரிவல பாதையில் பைக் சாகசம் வீடியோ வெளியிட்டவர் கைது
ADDED : ஜூன் 05, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பைக் சாகசம் செய்து, வீடியோ வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அஜீத், 20, பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களாக கிரிவலப்பாதையில் பைக் மீது நின்றபடி பைக்கை வேகமாக ஓட்டி சாகசம் செய்து, வீடியோ எடுத்து வைரலாக்கினார்.
பக்தர்கள் அமைதியாக கிரிவலம் செல்லும்போது இடையூறாக இருந்ததால், இது குறித்து பொதுமக்கள் போலீசில் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார், அஜீத்தை கைது செய்தனர்.