/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
சிகிச்சை பெற்ற பெண் சாவு போலி டாக்டர் தலைமறைவு
/
சிகிச்சை பெற்ற பெண் சாவு போலி டாக்டர் தலைமறைவு
ADDED : ஆக 23, 2024 02:39 AM
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், சுதந்திர வீதியை சேர்ந்த தொழிலாளி சேதுபதி. இவரது மனைவி பிரியங்கா, 36.
இவருக்கு காய்ச்சல் பாதிப்பால், குடியாத்தம் வாரியார் நகரில் நர்சிங் மட்டுமே படித்து, கிளினிக் அமைத்து, சிகிச்சையளித்து வந்த பிரியா என்பரிடம், நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றனர். அவர், பிரியங்காவிற்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார். வீட்டிற்கு சென்ற பிரியங்கா, நேற்று காலை உயிரிழந்தார்.
குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் பாபு, குடியாத்தம் டவுன் போலீசார், பிரியா நடத்தி வந்த கிளினிக்கில் சோதனை நடத்தி, அங்கிருந்த ஆங்கில மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் டவுன் போலீசார், தலைமறைவான போலி பெண் டாக்டர் பிரியாவை தேடி வருகின்றனர்.

