/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
ஊர்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா
/
ஊர்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி நிறைவு விழா
ADDED : ஏப் 09, 2024 07:55 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், ஊர்காவல் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
தர்மபுரி,
வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், 30 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு, 45
நாள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பயற்சி நிறைவு
விழா நேற்று நடந்தது. இதில், அவர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. இதை
மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
மேலும், இந்த அணிவகுப்பு மரியாதையை ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர்
தண்டபாணியும் ஏற்றுக்கொண்டார். ஆயுதப்படை டி.எஸ்.பி., சத்தியமூர்த்தி,
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எஸ்.ஐ., பாருக் ஆகியோர் உடனிருந்தனர்.

