/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
வைகாசி கிருத்திகை உற்சவம் வள்ளிமலையில் விமரிசை
/
வைகாசி கிருத்திகை உற்சவம் வள்ளிமலையில் விமரிசை
ADDED : ஜூன் 06, 2024 01:54 AM
வள்ளிமலை:வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலையில் அமைந்துள்ளது, வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில்
பிரசித்தி பெற்ற இக்கோவிலில், நேற்று வைகாசி மாத கிருத்திகை உற்சவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு ஊர்க்கோவில் மற்றும் மலைக்கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
வள்ளிமலை, காட்பாடி, கோட்டநத்தம், மேல்பாடி, பொன்னை, விடிஙய்காடு, தங்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் முருகர் கோவில், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களிலும் நேற்று கிருத்திகை சிறப்பு உற்சவம் நடந்தது.