/
உள்ளூர் செய்திகள்
/
வேலூர்
/
1,000 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
/
1,000 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு
ADDED : டிச 28, 2024 01:49 AM
வேலுார்: வேலுார் அருகே, 1,000 ஆண்டு பழமையான, முதலாவது பராந்தக சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்-கப்பட்டது.
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பெருமாள் கோவிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பழமையான கல்வெட்டு ஒன்று கிடைத்தது. இதையடுத்து இந்த கல்வெட்டை, விழுப்புரம் மாவட்டம் தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் தலை-மையிலான தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்தனர். இது குறித்து ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது:
இவை, 1,000 ஆண்டு பழமையான கல்வெட்டு, சோழ அரசரான, 1ம் பராந்தக சோழனின் புகழை எடுத்து-ரைக்கும் வகையில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்பாடி எனும் வீரநாராயணபுரம் இந்த ஊரின் பெயர் என்றும், முதலாம் பராந்தக சோழரால், இப்பகுதியில் ஸ்ரீவீர நாராயண பெருமாள் கோவில் கட்டப்பட்-டுள்ளது என்றும், இங்கு வியாபாரிகள் அதிகமானோர் வசித்ததாகவும், இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்-ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.